search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு
    X

    கோப்புபடம்.

    வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு

    • நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.இருப்பினும், சில ஊராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக்கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×