என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கொங்கு மண்டல மாநாடு திருப்பூரில் இன்று மாலை நடக்கிறது
- திருப்பூர் விஜயாபுரம் பெம் ஸ்கூல் அருகில் கொங்கு மண்டல மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடக்கிறது.
- திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வரவேற்று பேசுகிறார்.
திருப்பூர் :
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், தமிழக தனியார் ேவலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் நலிந்து வரும் தொழில் வளத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருப்பூர் விஜயாபுரம் பெம் ஸ்கூல் அருகில் கொங்கு மண்டல மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடக்கிறது. மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மண்டல தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜா உசேன் தலைமை தாங்குகிறார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வரவேற்று பேசுகிறார்.
மாநில தலைவர் நெல்லை முபாரக் , கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் திருவடிக்குடில் சுவாமிகள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பா.ம.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் முகைதீன், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அகமது நவவி, உமர் பாரூக், நிஜாம் முகைதீன், அம்ஜத் பாஷா, ஷபீக் அகமது, அபுதாஹிர், அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜாபிர் அகமது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டமாநாட்டு குழு நிர்வாகிகள், பல்லடம், தாராபுரம், அவினாசி தொகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். முடிவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு நன்றி கூறுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்