search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பூர் சித்ரகுப்தர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
    X

    சித்ர குப்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.  

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பூர் சித்ரகுப்தர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    • சித்ரா பெளர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழா இன்று நடைபெற்றது
    • சித்ரகுப்தர் திருவீதி உலா ஊஞ்சல் ராகத்துடன் திருக்கோவில் வந்தடைந்தது

    திருப்பூர் :

    திருப்பூர் சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் 94ம் ஆண்டு சித்ரா பெளர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியானது சித்ரகுப்தர் திருவீதி உலா ஊஞ்சல் ராகத்துடன் திருக்கோவில் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு யாகம் துவங்கப்பட்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டு சித்ர குப்தருக்கு தேன்,நெய்,பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் கலசாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சித்ரகுப்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னம் படைத்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைக்கும் வழிபாடு செய்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சித்ரகுப்தரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×