என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பழனி தைப்பூச திருவிழாவையொட்டி நிலாச்சோறு படைத்து வழிபடும் பெண்கள்
அவினாசி:
பழனி மலைக்கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகரில் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து, நிலா சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேர் திருவிழா தொடங்கியதும் நிலாவை குழந்தையாக எண்ணி சோறு ஊட்டும் நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றனர்.
முதல் நாளான நேற்று அவரவர் வீடுகளிலிருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள மைதானத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை ஏருக்கலாம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து பாட்டுப்பாடி அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு வந்தனர். தேரோட்டம் வரை தினசரி இரவு கலவை சாதம் நிலாவிற்கு படைத்துகும்மியடித்து பாட்டுப்பாடி அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு வருவர்.
5-ந் தேதி பழனி மலை கோவில் தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு இரவு பொது இடத்தில் தேர் வரைந்து வீடுகளிலிருந்து கடலை மாவால் செய்யப்பட்ட ஒப்பிட்டு மற்றும் பலகாரங்கள், பழவகைகளை நிலாவுக்கு படைத்து வழிபட்டு அனைவரும் கும்மியடித்தும், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பவுர்ணமி நிலாவெளிச்சத்தில் பல விளையாட்டுகளை விளையாடுவார்கள்.