என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் பஸ் நிலையத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை திறப்பு
- கட்டணமில்லா கழிவறை கடந்த இரண்டு மாதகாலமாக பராமரிக்கப்பட்டு புது பொலிவுடன் காணப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தாராபுரம்:
தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கூடிய கட்டணமில்லா கழிப்பறை சிதலமடைந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. பஸ் பயணிகள் பயன்படுத்த அச்சம் தெரிவித்து வந்தனர். இதனை பராமரிக்க கோரி நகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கட்டணமில்லா கழிவறை கடந்த இரண்டு மாதகாலமாக பராமரிக்கப்பட்டு புது பொலிவுடன் காணப்பட்டது. இந்த வளாகத்தை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பாக உலகத் தாய்பால் தினத்தை முன்னிட்டு தாராபுரம் பஸ் நிலையத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரவிசந்திரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா, நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.