என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க ஆன்லைன் தேர்வு நடத்த உத்தரவு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க ஆன்லைன் தேர்வு நடத்த உத்தரவு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/11/1913598-untitled-1.webp)
கோப்புபடம்
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க ஆன்லைன் தேர்வு நடத்த உத்தரவு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
- வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடவாரியாக தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகள் தயாரித்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
தேர்வு முடிந்ததும் தவறான கேள்விகளுக்கான விடை உடனே திரையில் தோன்றும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கான எமிஸ் பக்கத்தில் பதிவாகும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வட்டார, மாவட்ட அளவிலான தேர்வுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இக்கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தேர்வை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில் இத்தேர்வு நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு தலைமை யாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.