search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை கால நோய்களை தடுக்க சுகாதாரத்துறையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
    X

    கோப்பு படம்.

    பருவமழை கால நோய்களை தடுக்க சுகாதாரத்துறையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு

    • தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.
    • நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.

    உடுமலை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குகிறது. தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வேண்டும். மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு சீராக இருப்பதை ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவமனை வளாகம், காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கட்டாயம் ஆராய வேண்டும்.

    சுகாதார மாவட்டம், வட்டாரங்கள் வாரியாக விரைவு சிகிச்சை குழு, கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

    பருவமழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்று குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து, காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

    நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு வழிகாட்டுதல் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×