search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லக்கூடாது - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
    X

    கோப்புபடம்.

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லக்கூடாது - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

    • திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
    • நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

    திருப்பூர் :

    சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டமானது அரசு தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்றது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. நிா்வாகிகள் தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனா். இதில், கோவை, திருப்பூா் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும், வேளாண்மை மேம்பாட்டுக்கும் உதவியாக உள்ள பிஏபி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டிஎம்சி. நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 டி.எம்.சி. நீரை ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் என்ற பெயரில் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. பிஏபி. திட்டத்தில் ஏற்கனவே ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது.மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிஏபி. தொகுப்பு அணைகளாக உள்ள வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணைஆகியவற்றுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தீா்மானம் ஊராட்சி மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஊத்துக்குளி ஒன்றியம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் வினீத் பங்கேற்றாா்.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×