search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கையை நிறைவேற்றாததால் பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்
    X

    கோப்புபடம்.

    கோரிக்கையை நிறைவேற்றாததால் பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்

    • வாரத்தில் 3 அரைநாட்கள் பணிபுரியும் இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
    • பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது.

    தாராபுரம் :

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, கலைப்பாடப்பிரிவுகள் கையாள பகுதிநேர ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.

    வாரத்தில் 3 அரைநாட்கள் பணிபுரியும் இவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உட்படுத்தி உறுதியளித்தது. ஆட்சியை பிடித்த பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்காக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து, போராடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அறிவிப்பு வெளியாகாதது, ஏமாற்றத்தை அளிப்பதாக புலம்பி வருகின்றனர்.

    இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர் 50 வயதை தாண்டி விட்டனர். இனியும் காலமுறை ஊதியத்திற்குள் வராவிடில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    Next Story
    ×