என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலுவை தொகையை செலுத்தி கிரையப்பத்திரம் பெற்று கொள்ளலாம்
- எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுகொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு அதனை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள அரசால் அரசாணை (நிலை) எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அந்தஅரசாணையின்படி திருப்பூர் மாவட்டத்தில்செயல்படுத்தப்பட்டுள்ளமுதலிபாளையம், பல்லடம் நிலை -I,II, பெரியார் நகர், பொள்ளாச்சி, உடுமலை பேட்டை, வேலம்பாளையம் ஆகிய திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடியில் அதனை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சலுகை வருகிற 3.5.2023 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும், எக்காரணத்தைக்கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது . எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்அடையுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.