என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தரம் பிரிக்காமல் குப்பைகளை வழங்கினால் அபராதம்
- சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
- 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது.
அவினாசி, நவ.23-
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள 18 வார்டுகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தினசரி டன் கணக்கில் குப்பை சேருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 52 தள்ளுவண்டிகளில் துப்புரவு பணியாளர்கள் தினசரி குப்பையை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே வீடுகள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒருவாரத்திற்கு வீடுவீடாக சென்று குப்பையை தரம்பிரிக்காதவர்கள் யார் என்று ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர். பெரிய வார்டுகள், வியாபார நிறுவனங்களில் அதிக அளவில் குப்பை சேருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தரம் பிரித்து வழங்கினால் தூய்மை பணியாளர்களுக்கு வேலை பழு குறைவதுடன் அனைத்து பகுதிகளிலும் விரைவில் குப்பை சேகரிக்க ஏதுவாக இருக்கும்.
குப்பையில்லா பேரூராட்சியாக மாற்றும் நோக்குடன் குப்பைகள் தேங்காமல் தினசரி சேகரிப்பதற்காக 15-வது நிதிக்குழு மானியம் மூலம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியுடன்4 ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 2-பகுதிகளாக பிரித்து குப்பைகள் சேகரிக்கப்படும். அதற்கு முன்பாக 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது. மேலும் தரம்பிரிக்காமல் குப்பையை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்