என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
- பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்:- வ .உ .சி. நகர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர்முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு குறைந்தும், சில சமயம் குடிநீர் கிடைக்காமலும் போகிறது.
எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குடிநீர் முறையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.