search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
    X

     முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.

    குடிநீர் கேட்டு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    • கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் வரி மிக அதிக அளவு வசூலிக்கின்றனர்.

    அவினாசி :

    அவினாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை, சின்னேரி பாளையம், நடுவச்சேரி ஆகிய 3 ஊராட்சி பகுதியில் 20, 25 நாட்களுககு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், பழங்கரை ஊராட்சி துணைத்த லைவர் மிலிட் டரி நடராசன் உள்ளிட்டோர் கூறுகையில் , எங்கள் பகுதியில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள்தொகை தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் 5 ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே அளவு கொடுப்பதுடன் வாரம் ஒருமுறை வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிவிட்டு பழங்கரை, சின்னேரி பாளையம், நடுவச்சேரி ,பொங்குபாளையம் ஆகிய ஊராட்சி பகுதி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் மிக குறைந்த அளவு 20,25 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தந்துவிட்டு தண்ணீர் வரி மிக அதிக அளவு வசூலிக்கின்றனர். குடிநீர் அனைத்துப்பகுதிகளுக்கும் வழங்குவது போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இநத இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×