search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு 6மாத கால அவகாசம் வழங்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு
    X

    மனு அளிக்க வந்த வணிகர்கள். 

    டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு 6மாத கால அவகாசம் வழங்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு

    • தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    வணிகவரித்துறையினரால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும் , டெஸ்ட் பர்சேஸ் செய்வது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிட்ட போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும் வணிகவரித்துறை அதிகாரிகள் டெஸ்ட் பர்ச்சேஸ் எனும் பெயரில் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதனை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு 20,000 ரூபாய் வரை அபராதம் வசூலிப்பதாகவும், இதனால் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையரிடம் வணிகர்கள் இன்று மனு அளித்தனர்.

    Next Story
    ×