என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அனைத்து சீசனிலும் காய்கறி உற்பத்தி செய்ய 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பம் - விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
- காய்கறி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
- பயிரின் தேவைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையை பராமரிக்கலாம்.
உடுமலை :
உடுமலை பகுதியில் காய்கறி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். நுண்ணீர் பாசனம், குழித்தட்டு நடவு முறை, மல்ஷிங் சீட் உட்பட தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, விவசாயிகள் இம்முறைகளுக்கு மாறி வருகின்றனர். இதே போல் ஆண்டு முழுவதும் சீரான காய்கறி உற்பத்திக்கு 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.
திறந்தவெளி தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யும் போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான காலநிலை காரணிகளான வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், தண்ணீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை, பயிருக்கு ஏற்ப கட்டுபடுத்த முடியாது.ஆனால் 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பத்தில் குடில் அமைத்து உட்பகுதியில் பயிரின் தேவைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையை பராமரிக்கலாம். இதனால் அதிக பனிப்பொழிவு மற்றும் வெப்பம் நிலவும் பகுதிகளிலும் சீராக காய்கறி உற்பத்தி மேற்கொள்ள முடியும்.மலர் வகைகளில் கிளாடியோலஸ், கார்னேசன், சாமந்தி, சம்பங்கி, டாலியா, ஜெர்பிரா, ஆந்தூரியம், அரளி, ஆர்க்கிட் ஆகிய ரகங்களை ஆண்டு முழுவதும் இத்தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்ய முடியும்.வெள்ளரி, குடைமிளகாய், கொடித்தக்காளி, கத்தரி, பாலக்கீரை மற்றும் இதர வகை அலங்கார மலர்கள் உற்பத்தியும், பாலிஹவுஸ் எனப்படும் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், குறைந்த சாகுபடி பரப்பு உள்ளவர்களுக்கு மானியத்தில் பாலிஹவுஸ் அமைத்து கொடுத்தால் அனைத்து சீசனிலும், காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபடலாம்.முன்பு இத்திட்டம் குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் பாலிஹவுஸ் மானியத்திட்டத்தை அரசு செயல்படுத்தினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றனர்.