search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகள் திறப்புக்கான ஆயத்தப்பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்.

    பள்ளிகள் திறப்புக்கான ஆயத்தப்பணிகள் தீவிரம்

    • மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
    • தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

    இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.சில பள்ளிகளில், போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தான் துவங்கப்பட்டுள்ளன.

    பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் விநியோகித்து கற்றல், கற்பித்தல் பணிகளை துவங்க வேண்டும். இதற்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய, வட்டார கல்வி அலுவலர்கள், ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது.

    இது குறித்துகல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டாலும், மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கின்றன. புதிய கல்வியாண்டை துவங்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.

    Next Story
    ×