search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சியில் சொத்து வரி வசூல் செய்யும் பணி தொடங்கியது
    X

    கோப்புபடம்.

    பல்லடம் நகராட்சியில் சொத்து வரி வசூல் செய்யும் பணி தொடங்கியது

    • 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
    • பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன.

    பல்லடம் :25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு செய்யப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    இது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன. சொத்து வரி உயர்வு தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சொத்து வரி உயர்த்துவதற்கான கட்டடங்களின் நீள, அகலம், உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, புதிய வார்டுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி துவங்கியுள்ளது. புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இனி மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×