என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பால் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
- சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள பால் குளிர்வு நிலையம் முன்பு பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
- பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு, பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் உடனே வழங்க வேண்டும்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள பால் குளிர்வு நிலையம் முன்பு பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கும் பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் உடனே வழங்க வேண்டும் என கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பால் கூட்டுறவு சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சேமலைகவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் குப்புசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், கிளை நிர்வாகி கருங்காலிபாளையம் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். இப்போராட்டத்தில் விவசாயிகள் சின்னச்சாமி, பழனிச்சாமி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.