என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வைப்புத்தொகையை வழங்க கோரி பல்லடத்தில் வங்கி முன்பு காத்திருப்பு போராட்டம்
- இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்.
- நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது
பல்லடம்:
பல்லடம் அருகே, கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:- கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் மந்தராசலம் என்ற விவசாயி கடன் பெற்றிருந்தார்.
அந்தக் கடனுக்கான வைப்பு தொகையை கடந்த 5 மாதங்களாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமலும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை வழங்காமலும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து காலம் தாமதம் செய்து வந்தது. எனவே காலம் தாழ்த்தி வந்ததை கண்டித்தும், இதே வங்கியில் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அவர்களை அழைத்தனர்.இதில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வைப்புத் தொகையை திருப்பி வழங்கியும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை அவரது வங்கி கணக்கில் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட 603 நபர்களில் 402 வங்கி வாடிக்கையாளர்களுக்கு நகை மோசடியில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 201 வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பி உடனடியாக இழப்பீட்டை வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்தது. மேலும் வங்கியில் இருந்து நகையை மீட்டு சென்ற 84 வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஒரு மாத காலத்திற்குள் அவர்களுக்கும் நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர், மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில துணைத்தலைவர் அரசேந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் வரதராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்