என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பைகள்-கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது.
- பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் நல்லூர் பகுதி 3-ம் மண்டலத்தில் அமைந்துள்ள 46வது வார்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். அந்த நிலத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கொசு தொல்லை மற்றும் பல நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீர்கள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எத்தனையோ முறை பொதுமக்கள் சார்பாக தடுத்து பார்த்தும் குப்பைகள் மற்றும் கம்பெனி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டும் இடமாக அந்த இடம் மாறி வருகிறது. அதுபோக அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்ச நிலையையும் நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது . திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பஸ் நிறுத்தம், கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநகரின் பல இடங்களில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் காமாட்சி புரம் கல்லூரி சாலையில், மின் இணைப்புக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி சாலை ஓரத்தில் போட்டுள்ளதால் கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்