search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே 200 ஆண்டு பழமையான அரச மரத்தை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    இலைகள் உதிர்ந்த நிலையில் பழமையான அரச மரம்.

    பல்லடம் அருகே 200 ஆண்டு பழமையான அரச மரத்தை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

    • மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.
    • 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த அரச மரம் பட்டுப் போய் விடுமோ என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் அல்லது, விபரம் தெரிந்த விவசாயிகள், இந்த 200 வயது மரத்தை காப்பாற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×