என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவினாசி பகுதியில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்
- வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை உண்டியல் திருடப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் சாமிநாதன் , ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி ருக்மணி . இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள்சிதறிகிடந்தன. மேலும் பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை போட்டுவைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்சுமார் ரூ.8 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது.
அதே தெருவில் எதிர்திசையில் சாமிநாதனின் மகள் கோகிலவாணி (36) அவரது கணவர் ரமேஷ் (41) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரமேஷ் நல்ல கட்டிபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், கோகிலவாணிகருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று பின்னர் மாலை திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து பணம் ரூ 50 ஆயிரம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ10 ஆயிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஒரே பகுதியில் பட்டப்பகலில் எதிர் எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 29-ந்தேதி அதே கமிட்டியார் காலனியில் அடுத்தடுத்து தர்மர், மணிகண்டன் ஆகியோரது வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.
அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில் ,குடியிருப்புகள் நிறைந்த இதே பகுதியில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பகல் சமயத்தில் கூட வீட்டை பூட்டிவிட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோல் தொடர் திருட்டு நடைபெறுவது நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். கமிட்டியார் காலனி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் என்றனர்
கொள்ளை குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்