search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது சிவில் சட்டத்தை கண்டித்து மங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம்
    X

    கோப்புபடம்

    பொது சிவில் சட்டத்தை கண்டித்து மங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம்

    • தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது
    • கர்நாடக தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல 2024-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்றார் சுடலை.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்தை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை விளக்கியும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்சாதிக் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயம்செந்தில் வரவேற்புரையாற்றினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்தோஷ் கிருஷ்ணன், , திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன், திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, , தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பொது சிவில் சட்டத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை இந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் " மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தினால் ஏற்பட இருக்கின்ற பாதிப்புகளை விளக்கியும் பேசினார்.மேலும் சமீபத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல 2024-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்றார்.

    Next Story
    ×