search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பழைய கல்குவாரி உள்ளது. இதில் உள்ள தண்ணீரை கல்குவாரி லாரிகள் மூலம் எடுத்துச் சென்று கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி செயல்படும் பகுதிகளில் உள்ள ரோடுகளுக்கு தண்ணீர் விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த ரோடுகளில் கல்குவாரி லாரிகள் செல்லும் போது மண்புழுதி பறக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சுக்கம்பாளையம் பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்ற 2 லாரிகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெறு வதாகவும், இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு இங்குள்ள விவசாய கிணறுகள் வற்றி விடுவதாகவும், பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) பல்லடம் தாலுகா அலுவ லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×