search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெட்வொர்க்  கட்டணத்தை குறைத்து  சூரிய ஒளி மின்   உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும் - ஜவுளி  தொழில் துறையினர் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    நெட்வொர்க் கட்டணத்தை குறைத்து சூரிய ஒளி மின் உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும் - ஜவுளி தொழில் துறையினர் வலியுறுத்தல்

    • சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர்

    மின் கட்டண உயர்வு விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்துறையினரை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதற்கு தீர்வாக சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் பயன்படுத்தினர். தற்போது சோலார் மின்சாரம் பயன்படுத்துவதற்கான நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இது குறித்து நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 27 பைசாவாக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒரு ரூபாய் 48 பைசாவாக உயர்த்தப்பட்டது. நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 1 முதல் ஒரு ரூபாய் 53 பைசாவாக மீண்டும் நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.சூரிய ஒளி மின் உற்பத்தியை கணக்கீடு செய்ய மீட்டர் பொருத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட நெட்வொர்க் கட்டணத்தை குறைத்து சூரிய ஒளி மின் சக்தி உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.

    Next Story
    ×