search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் பார்சல் கட்டணம் குறைப்பு
    X

    கோப்புபடம்.

    ரெயில்களில் பார்சல் கட்டணம் குறைப்பு

    • ரெயில்களில் அனுப்பப்படும், பார்சல்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று பார்சல்களுக்கான கட்டணம் 286 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்களில் அனுப்பப்படும், பார்சல்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாலக்காடு கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களூர் - யஷ்வந்த்பூர் ரெயில், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9:15 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து புறப்பட்டு (வழித்தட எண்: 16540) இரவு 8:20 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது.

    பொள்ளாச்சி - கோவை ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 7:25 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு (வழித்தடம் எண்: 06240) காலை 8:40 மணிக்கு கோவை சென்றடைகிறது.

    நீலாம்பூர்- சொர்ணுார், முன்பதிவில்லா தினசரி விரைவு ரெயில் காலை 7 மணிக்கு கேரள மாநிலம், நீலாம்பூரில் (வழித்தடம் எண்: 06466) புறப்பட்டு காலை 8:40 மணிக்கு சொர்ணுார் சென்றடைகிறது.

    சொர்ணுார் - நீலாம்பூர் முன்பதிவில்லா தினசரி விரைவு ரெயில் மாலை, 5:55 மணிக்கு சொர்ணுாரில் புறப்பட்டு (வழித்தடம் எண்: 06473) இரவு 7:35 மணிக்கு நீலாம்பூர் சென்றடைகிறது.

    சர்வத்துார் -- மங்களூரு சென்ட்ரல் முன்பதிவில்லா தினசரி விரைவு ரெயில் கேரளா மாநிலம் சர்வத்துாரில் இருந்து (வழித்தடம் எண்: 06491) முதல் நாள் காலை, 6:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு மங்களூர் சென்றடைகிறது.

    கண்ணுார் -சர்வத்துார் முன்பதிவில்லா தினசரி விரைவு ெரயில் கேரளா மாநிலம், கண்ணுாரில் இருந்து மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டு, (வழித்தடம் எண்: 06469) மாலை, 6:30 மணிக்கு சர்வத்துார் சென்றடைகிறது.

    இந்த ரெயில்களில் ஒரு டன் அளவுக்குள் அனுப்பப்படும் பார்சல்களுக்கு, ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டன் அளவுக்குள் அனுப்பப்படும் பார்சல்களுக்கான கட்டணம் 286 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×