search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் - பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் - பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்

    • பாசன விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதுடன் நீர் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கலாம்.
    • நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மிகப்பெரும் சவாலாக உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பி.ஏ.பி., நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறனாக்க பயிற்சி முகாம் நடந்தது. திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 32 சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பி.ஏ.பி., உதவி பொறியாளர்கள் சரவணன், விஜய் தினேஷ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி வல்லுநர் சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    முன்னதாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை என விவசாயிகளை 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு நீர் ஆதாரம், நிதி ஆதாரம், நீர் நிர்வாகம், சங்கத்துக்கும் நீர் வள ஆதார துறைக்கும் இடையிலான தொடர்பு உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் கேட்கப்பட்டன.

    பயிற்சி குறித்து சில விவசாயிகள் கூறியதாவது:-

    மத்திய மாநில அரசு மூலமும், விவசாயிகளின் பங்களிப்பு மூலமாகவும் நிதி ஆதாரம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு கால கட்டங்களில் தண்ணீர் திருட்டை தடுக்க முடியவில்லை. அதிகாரிகளும், போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தடுக்கலாம். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மிகப்பெரும் சவாலாக உள்ளது.நீர் கண்காணிகள் நிறுவப்பட வேண்டும்.

    ஆக்கிரமிப்பு மற்றும் வாய்க்கால் சேதம் சட்டப்படி குற்றம். இதற்கு, ஜாமீன் இல்லாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் போலீஸ் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.பாசன விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதுடன் நீர் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கலாம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×