என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
- 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வசிப்பவர்கள், கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
- மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், லேப் ஆகியவை போதிய அளவு இல்லை.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் தாலுகா கணியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் அரசுக்கு முன் வைக்கப்பட்ட தீர்மான விபரம் வருமாறு: காரத்தொழுவு, வஞ்சிபுரம், கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வசிப்பவர்கள், கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இங்கு அடிப்படை சுகாதார நிலையத்திற்கு உண்டான கட்டமைப்பு மற்றும் உபகரணம் மட்டுமே உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், லேப் ஆகியவை போதிய அளவு இல்லை. ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நோயாளிகளுடன் வருபவர்கள் காத்திருக்க இடவசதி இல்லை. இந்தப் பகுதியில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைபவர்கள் மற்றும் இதர நோயாளிகளுக்கு தகுந்த அளவில் படுக்கை வசதிகள் இல்லை. இதனால் மடத்துக்குளம் அல்லது உடுமலைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இ
துபோன்ற குறைகளை அகற்றி கணியூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தொகையின் அளவிற்கு தகுந்த அளவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான அளவில் கட்டிடம் கட்டுவது, மருத்துவர்கள், செவிலியர்கள், நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.