என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மங்கலத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
- பஞ்சுமில்கள்,நூல்மில்கள், சைசிங் மில்கள், பனியன்கம்பெனிகள் ஏராளமாக உள்ளது.
- மங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான இடுவாய்ஊராட்சி, பூமலூர் ஊராட்சி,சாமளாபுரம் பேரூராட்சி,63வேலம்பாளையம் ஊராட்சி,இச்சிப்பட்டி ஊராட்சி ,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களின் மையப்பகுதியாக மங்கலம் உள்ளது.மேலும் இப்பகுதி கிராமங்களில் பெரும்பாலும் பஞ்சுமில்கள்,நூல்மில்கள், சைசிங் மில்கள், பனியன்கம்பெனிகள் ஏராளமாக உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் பஞ்சு மில் உரிமையாளர்கள் கூறுகையில் " மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் பஞ்சுமில், நூல்மில் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் 15 கி.மீ தொலைவில் உள்ள பல்லடம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுப்போம்.
அங்கிருந்து தீயணைப்பு வாகனம் வர சுமார் 20 நிமிடங்களை தாண்டிவிடும். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஞ்சு மில்லில் பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் என பெரிய பொருட்சேதம் ஏற்படுகிறது .எனவேமங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்மங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.