என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 வாரத்தில் தீர்ப்பை பெற்றுக்கொடுத்த போலீசாருக்கு வெகுமதி - போலீஸ் கமிஷனர் பாராட்டு
- 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
- நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.
திருப்பூர் :
திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் கடந்த 9-ந் தேதி இரவு 8¼ மணிக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்ற நபரிடம் இருந்து செல்போனை தட்டிப்பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியகவுண்டம்பட்டியை சேர்ந்த திருப்பூர் வெள்ளியங்காட்டில் வசித்து வரும் கோகுல் (வயது 20) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா கைது செய்தார்.
பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2 நாட்களில் புலன் விசாரணையை முடித்து, குற்ற இறுதி அறிக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3-ல் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் அந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் தீர்ப்பு கூறினார்.
திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று சம்பந்தப்பட்டவர்களை சிறையில் இருந்து வெளியே வராமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி சிறப்பாக பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த போலீசார் ராஜசேகர்,ஜெகதீஷ், சூரியகலா, ஏட்டு அகஸ்டின் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்