search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்
    X

     குப்பைகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்ததை படத்தில் காணலாம்.

    சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்

    • கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கிறது.
    • நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையின் மேல் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். குப்பைகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைத்தனர். கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கிறது.இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பைகளை கொட்டி நீரோடையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். மேலும் அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குப்பைகளில் வைக்கப்படும் தீ பரவி வாகனங்களில் பட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×