search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரைட்ஸ் திட்டம் செயல்பாடு மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    ரைட்ஸ் திட்டம் செயல்பாடு மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு

    • அரசு திட்டங்களும் எளிதாக மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
    • ரைட்ஸ் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும்.

    தாராபுரம் :

    மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் ரைட்ஸ் திட்டம் துவங்கப்படும் என 2021 பட்ஜெட்டில் நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். நோய் தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து அரசு திட்டங்களும் எளிதாக மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.இதற்காக ஒன்றிய அளவிலான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.திட்டத்துக்காக உயர்மட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் திட்டம் முழு செயல்வடிவம் பெறாமலேயே உள்ளது.

    வருகிற 17ந் தேதி சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கான மானிய கோரிக்கையில் ரைட்ஸ் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்கின்றனர் திருப்பூர் மாற்றுத்திறனாளிகள்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், அடையாள அட்டை பெறுவது உள்பட எந்த ஒரு அரசு திட்டங்களை பெறுவதற்கும் மாவட்ட அளவிலான அலுவலகத்தையே நாடவேண்டியுள்ளது. ரைட்ஸ் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஒன்றிய அளவில் மையங்கள் அமைவதால் அனைத்து அரசு திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையிலேயே எளிதில் பெறமுடியும் என்றனர்.

    Next Story
    ×