என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது .
- கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு அருகாமையில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர்.
இந்தநிலையில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது . மேலும் கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சாலையோரங்களில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் அப்பால் வியாபாரம் செய்து வந்ததைப் போல தற்போதும் அனுமதி வழங்கிட வேண்டும் , காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ,டி,யு. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.