என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அவினாசி அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளை அவினாசி அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/06/1757349-untitled-1.jpg)
X
கோப்புபடம்.
அவினாசி அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளை
By
மாலை மலர்6 Sept 2022 10:28 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீட்டை பூட்டிவிட்டு தோட்டவேலைக்கு சென்றுவிட்டார்.
- கம்மல், கால்கொலுசு மற்றும் பத்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
அவினாசி :
அவினாசியை அடுத்து நடுவச்சேரி அங்காளம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மனோன்மணி ( வயது 47) .கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டவேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 1/2 பவுன் கம்மல், கால்கொலுசு, மற்றும் காட்டு பத்திரம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X