என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நவராத்திரியையொட்டி விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை
- 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர்
- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
திருப்பூர்:
வருகிற 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர். கடவுள்களின் சிலைகள், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், புராண கதைகளை கண்முன் கொண்டு வரும் பொம்மைகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், பறவை, விலங்கினங்கள் என பல வகை பொம்மைகளை அலங்கரித்து வைப்பர். தற்போது அவற்றோடு சேர்ந்து மத சகிப்புத்தன்மையை போற்றும் வகையில் மும்மத கடவுள்களின் சிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த வனங்களின் தோற்றம், வளம் நிறைந்த எதிர்காலம் நம் தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நிறுத்தி பொம்மை அலங்காரங்களை வைக்கின்றனர். நவராத்திரி தொடங்க உள்ளதையடுத்து பொதுமக்கள் விதவிதமான பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர்.
அதற்கேற்ப பொம்மை தயாரிப்பாளர்களும், மக்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறு பொம்மைகளை அழகழகாக தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர்.திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
விநாயகர் கேரம் போர்டு விளையாடுவது, தசாவதார தோற்றம், ராமர் பாலம், சுப நிகழ்ச்சிகளில் கீழே அமர்ந்து உணவருந்துவது, காவிரியாறு உருவான வரலாறு, விஸ்வகர்மா உள்ளிட்ட பொம்மைகள் உள்ளன.
நவராத்திரிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள போதும், கொலு அலங்காரத்துக்கு பெண்கள் பொம்மைகளை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.