என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
'இ-நாம்' திட்டத்தின் கீழ் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
- திருப்பூர் மாவட்டத்தில்15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.
- இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, சேவூர், பெதப்பம்பட்டி, மூலனூர்,அலங்கியம் உள்ளிட்ட 15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.அந்தந்த பகுதியில் விளையும் பயிர்களுக்கு ஏற்ப பருத்தி, நிலக் கடலை, தேங்காய், தேங்காய் பருப்பு, கொப்பரை என பல்வேறு விளைப்பொருட்கள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சந்தைப் படுத்தப்படுகின்றன.அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறுகட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன. வருகிற ஏப்ரல் தொடங்கி அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இ-நாம் வர்த்தகத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தேவையான கம்ப்யூட்டர் வசதிகள், தொழில்நுட்ப கட்டமைப்பு, பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த 70 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இ-நாம் வர்த்தக முறையில் நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் வியாபாரிகள் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும். இடைத்தரகர் தலையீடு தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரி விக்கின்ற னர்.சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பொறுத்தவரை நிலக்கடலை வர்த்தகம் பெருமளவில் நடக்கும். தற்போது கொப்பரை கொள்முதல் மேற்கொள்ள அனுமதி கேட்டும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.