என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்பூர் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு திருப்பூர் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/12/1880348-untitled-1.webp)
கோப்புபடம்.
திருப்பூர் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
- 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.