என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே புதிய ரேஷன் கடை கட்டிடம் செல்வராஜ் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
- கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
- ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்.எல்.ஏ.,திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம்,மற்றும் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ. சேகர், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் உதயகுமார், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரேஷன் கடை திறப்பு விழா முடிந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ.,விடம் ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்றுகோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.