search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மேற்கு பருவமழையால் பட்டுக்கூடு உற்பத்தி குறைய வாய்ப்பு
    X

    கோப்பு படம்.

    தென்மேற்கு பருவமழையால் பட்டுக்கூடு உற்பத்தி குறைய வாய்ப்பு

    • உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.

    உடுமலை:

    பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு விற்பனை அங்காடி செயல்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெண் பட்டுக்கூடுகளை விவசாயிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் ஏல முறையில் பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது இம்மையத்துக்கு 700-1,000 கிலோ வரை பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    குறைந்தபட்ச விலையாக ரூ.400க்கு துவங்கி 700 வரை விற்கப்படுகிறது. குறிப்பாக கோவையில் வளர்க்கப்படும் பட்டுக்கூடுகள் பிற மாவட்டங்கள், கர்நாடகா மாநிலங்களில் நல்ல விலைக்கு கிடைக்கிறது.

    பட்டுக்கூடு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.

    தரம் குறைந்தால் அதன் விலையும் குறையும். ஆகையால் பட்டுக்கூடுகளை பாதுகாப்புடன் விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×