search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.வி.பி., பள்ளியில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

    • சிபிஎஸ்இ., சகோதயா கூட்டமைப்பினை சேர்ந்த ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டுதல் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சுமார் 410 க்கும் அதிகமான பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சிபிஎஸ்இ., சகோதயா கூட்டமைப்பினை சேர்ந்த ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டுதல் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையுரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராகவும், கருத்தாளராகவும்பெங்களூரு யோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்ரமணியம் கலந்து கொண்டுஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துதல் என்னும் தலைப்பில் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.முன்னதாக சிறப்பு விருந்தினரை விவேகானந்தா அகாதெமி சிபிஎஸ்இ., பள்ளியின் முதல்வர் பத்மநாபன் அறிமுகப்படுத்தினார். திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் சிபிஎஸ்இ., பள்ளியின் முதல்வர் ராஜேந்திர பிரசாத் சிறப்பித்தார். ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். தி ஏர்னஸ்ட் அகாதெமி சிபிஎஸ்இ., பள்ளியின் முதல்வர் புவனேஷ்வரி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் சுமார் 410 க்கும் அதிகமான பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×