search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி
    X

    கோப்புபடம்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி

    • கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உருவாக்கப்பட்டது.
    • தமிழகத்தில் 3,994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் :

    கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வசதியாக வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

    வறுமை ஒழிப்பை தாண்டி, நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வான ஒன்றியங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 120 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பொங்கலூர், உடுமலை, குண்டடம் ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் ஊராட்சி அளவிலான உற்பத்தியாளர் குழு, நிதி குழு, இளைஞர் குழுக்கள் உருவாக்கி, நிதி ஒதுக்கப்படுகிறது. சமூக திறன் பயிற்சி அளித்ததன் மூலமாக, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

    5 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிகளை செயல்படுத்த, ஊராட்சி அளவிலான தொழில்சார் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்ட மேம்பாடு தொடர்பாக, மாவட்ட அலுவலர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிலையில் பயிற்சி பெற்ற மாவட்ட அலுவலர்கள் தொழில் சார் பயிற்சியாளருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற மக்கள் மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    Next Story
    ×