search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 11.55 லட்சம் பேருக்கு பரிசோதனை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
    X

    மருத்துவ முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

    மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 11.55 லட்சம் பேருக்கு பரிசோதனை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

    • 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வட்டார அளவிலான மருத்துவ முகாம்களில் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தை நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, தோ்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சாலை விபத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கு 48 மணிநேர உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 11.55 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து 1,55,000 பேருக்கு இலவச மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

    தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், சாலையோரங்களில் ரூ.50.81 லட்சம் மதிப்பீட்டில் 18,489 மரக்கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் துவக்கிவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×