என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிசம்பர் 3ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பள்ளிக்கல்வி குழு நிர்வாகி மார்க்கெட் தங்கவேல், மற்றும் ஜெகதீஷ்,குட்டி பழனிசாமி, நடராஜன்,துணை தலைமை ஆசிரியர் சசிகலா, மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.