search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை - வாலிபர் கைது
    X

    கோப்புபடம்.

    ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை - வாலிபர் கைது

    • நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சோதனை செய்தனர்.
    • 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுப்படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும்கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

    அந்த வழியாக வந்த மொபட்டை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 450 கிலோ பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் செல்லம் நகரைசேர்ந்த அன்புமணி (வயது 23) என்பதும் இவர் நொச்சிபாளையம், வீரபாண்டி பகுதிகளில்உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பதுக்கி வைத்துவட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்புமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×