search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

    • முதுநிலைப்பட்ட வகுப்புகளுக்கு 16-ந்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
    • தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதளததில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதுநிலைப்பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக வருகிற 16-ந்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப்பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக வருகிற 16-ந்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் தவிர போலியான வேறு முகவரியில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம். இதில், விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.60 ஐ நெட்பேங்கிங், டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு மூலமாக செலுத்தலாம்.

    கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் 18 , ஆங்கில இலக்கியம் (18), பொருளியல் (18), எம்.காம் (40), எம்.காம். சா்வதேச வணிகம் (40), எம்.எஸ்.சி.கணினிஅறிவியல் (25), இயற்பியல் (30), வேதியியல் (16), கணிதம் (50), விலங்கியல் (40), ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (20) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. (அடைப்புக்குறிக்குள் காலி இடங்கள்)

    முதுநிலைப்பட்ட வகுப்புகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோா் இளநிலைப் பட்ட வகுப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இளநிலைப் பட்ட வகுப்புகளில் கணிதம் பயின்றவா்கள் முதுநிலை கணினி அறிவியல் பட்டவகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.முதுநிலை ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் பாடப் பிரிவுகளில் சேர நான்கு பருவங்கள் தமிழ், ஆங்கிலம் பயின்றவா்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.இந்தப் பிரிவுகளுக்கு 16-ந் தேதிக்குப் பின்னா் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதளததில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×