search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு - அவிநாசி 2-ம் கட்ட திட்டத்திற்கான ஆய்வு பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்.

    அத்திக்கடவு - அவிநாசி 2-ம் கட்ட திட்டத்திற்கான ஆய்வு பணிகள் தீவிரம்

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது.
    • தேங்கும் தண்ணீர் கிட்டதட்ட 25 கி.மீ., தூரத்துக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.

    அவினாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டப்ப ணிகள் நிறைவு பெற்று வெள்ளோ ட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: - பெருந்துறையில் துவங்கி கோவை மாவட்டம் காரமடை வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே உபரி நீர் வெளியேற்றம் அமையும். பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், கள ஆய்வு நடத்தி திட்டத்தின் இர ண்டாம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகி ன்றனர். தற்போது நிறைவேற்றப்பட உள்ள திட்டத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் அவிநாசி கருவலூர் அருகே பெரிய கானூரில் 148 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த ஏரி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கம்என்ற அமைப்பை ஏற்படுத்தி குளத்தை ஆக்கிரமித்திருந்த சீமை கருவேலன் மரங்களை அகற்றினர்.குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தில் சுற்றியுள்ள குளம், குட்டைகளில் வெள்ளோ ட்ட அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், பெரிய கானூர் குளத்துக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-கோவை கவுசிகா நீர் கரங்களுடன் இணைந்து இக்குளத்தை இயன்றளவு பராமரித்துள்ளோம். இதில் தேங்கும் தண்ணீர் கிட்டதட்ட 25 கி.மீ., தூரத்துக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதன் வாயிலாக சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும்.கால்நடைகள் மற்றும் பறவைகள்வாயிலாக பல்லுயிர்பெருக்கம் ஏற்படும்.தற்போது பொதுப்பணித்துறை சார்பில் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ்வெ ள்ளோட்ட அடிப்படையில் இதுவரை தண்ணீர் திறந்து விடாதது ஏமாற்றமளி க்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

    Next Story
    ×