search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தமிழ் திருவிழா-2023 மலருக்கு தமிழ் இலக்கிய, இலக்கண கட்டுரை வரவேற்கப்படுகிறது
    X

    கோப்பு படம்.

    முத்தமிழ் திருவிழா-2023 மலருக்கு தமிழ் இலக்கிய, இலக்கண கட்டுரை வரவேற்கப்படுகிறது

    • டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது.
    • பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர்:

    முத்தமிழ் திருவிழா -2023 மலரில் இடம்பெற தமிழ் இலக்கிய, இலக்கண கட்டுரைகளை 31ந் தேதிக்குள் அனுப்பலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது. ஆன்மிக பெரியோர்கள், ஆதீனகர்த்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.

    தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கணங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்தரங்குகள் நடக்கின்றன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகளை பெற்று தொகுப்பு மலர் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை இப்பணியை ஒருங்கிணைக்கிறது.

    தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம், தமிழும் பிற மொழிகளும், தமிழின் பண்பாடு, வரலாறு, மாட்சிமைத்திறன், அறிவியல் மற்றும் கல்வி சிந்தனை சார்ந்த பொருளில் கட்டுரைகள் இருக்க வேண்டும்.பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும். கட்டுரைகள், ஏ4 அளவு தாளில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    muthamilthiruvizhakovai2023@gmail.com அல்லது 80726 54314 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் அனுப்பலாம். கட்டுரைகளை ஜூலை 31ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    கட்டுரையாளரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80726 54314, 86103 25998 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×