search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் களமிறங்கிய ஆசிரியர்கள்
    X

    கோப்புபடம்.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் களமிறங்கிய ஆசிரியர்கள்

    • வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
    • வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும்.

    திருப்பூர் :

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதற்காக 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலரை அனுப்பி விவரங்களை பெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- பலரும் வங்கிக்கணக்கு, ஆதார் எண் இணைப்பது என தவறான புரிதலில் உள்ளனர்.சில வீடுகளில், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு பிரச்னை என்றாலும், வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதி 2023க்குள் இணைத்துவிட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டி வரும்.இந்நிலையில், பாடக்குறிப்பேட்டை தயார் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த வேண்டும். ஓராசிரியர், இரண்டு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாற்று ஆசிரியர் கற்பிக்கவும் வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×