என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கேபிள் மூலம் தொலைபேசி, இணைதளம், தொலைக்காட்சி சேவை
- அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
மத்திய, மாநில அரசு திட்டம் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனம் சார்பில், பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கேபிள் வாயிலாக இணையதள சேவை வழங்கும் திட்டத்தில் ஒரு இணைப்பு பெற்ற சந்தாதாரர், டி.வி., தொலைபேசி மற்றும் இணையதளம் என 3 சேவைகளையும் பெறலாம். இணையதள சேவை வேண்டாம் எனில் டி.வி., ஒளிபரப்பு சேவையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் கேபிள் தாசில்தார் ரவீந்திரன், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாக்களில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கலந்தாய்வு நடத்தினார்.
இது குறித்து தாசில்தார் கூறியதாவது:- நடைமுறையில் உள்ளதை காட்டிலும் 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.புதிய பைபர் நெட் சேவையை பெற அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். பைபர் நெட் திட்டம் வந்த பிறகு அரசு கேபிள் இணைப்புகளை அதிகரிக்க சிரமம் ஏற்படும்.
எனவே நெட் இணைப்பு சேவை வழங்க விரும்பும் கேபிள் ஆபரேட்டர்கள் முன்கூட்டியே அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று ஒளிபரப்பை துவக்க வேண்டும். பயன்படுத்தாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களையும், முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.அரசு கேபிள் சேவை கிடைக்காத பகுதியில் புதிய நெட் சேவை தேவைப்பட்டால் புதிய ஆபரேட்டரை உருவாக்கி சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.