search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களை பாதுகாக்க, தமிழக மக்கள் முன்வர வேண்டும்.- இந்து முன்னணி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    கோவில்களை பாதுகாக்க, தமிழக மக்கள் முன்வர வேண்டும்.- இந்து முன்னணி வலியுறுத்தல்

    • இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
    • தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கோவில்களின் அவல நிலை குறித்து கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 16-ந் தேதி, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்து முன்னணி கொள்கை விளக்கம், இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.

    மொத்தம் 3,500 இடங்களில் நடந்த தெருமுனை கூட்டங்களில், 1.75 லட்சம் மக்கள் பங்கேற்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் குறித்தும், இந்துக்களின் நம்பிக்கைகள் திட்டமிட்ட ரீதியில் கொச்சைப்படுத்தும் தி.மு.க., - தி.க., - காங்., - கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் கட்சி என, ஆகிய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர் களான சமூக ஊடகத்தினர் (யூ-டியூபர்) பற்றியும்,இந்து விரோத செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட் சமயத்தில் ராளமான மக்கள், அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களின் அவல நிலை குறித்து கூறினர்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் அவல நிலையில் உள்ளது.

    இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, 'அரசே கோவிலை விட்டு வெளியேறு,' என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×